உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / ‘விவஸ்தை இல்லையா?’

‘விவஸ்தை இல்லையா?’

‘எந்த ஒரு நல்ல விஷயத்தை செய்தாலும், அதையும் அரசியலாக்குகின்றனரே...’ என புலம்புகிறார், மத்திய பிரதேச அரசின் பா.ஜ., முதல்வரான மோகன் யாதவ். மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்ப மேளா மிகவும் பிரசித்தி பெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்களும், துறவியரும் இங்கு வந்து புனித நீராடுவர். அடுத்த கும்ப மேளா, வரும் 2028ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவுள்ளது. இதில், 40 கோடி பக்தர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக, மத்திய பிரதேச அரசு கணித்துள்ளது. இதற்காக, உஜ்ஜைனில் சாலைகளை விரிவாக்கம் செய்வதற்காக, பல கட்டடங்களை அகற்றும் நடவடிக்கை துவங்கியுள்ளது. பலர், இதை ஏற்க மறுத்து, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். முதல்வர் மோகன் யாதவ், உஜ்ஜைன் நகரின் முக்கிய சாலையோரத்தில் உள்ள, தனக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியை இடிக்க முன்வந்துள்ளார். ‘இதற்காக அரசு இழப்பீடு எதுவும் தேவையில்லை’ என்றும் அறிவித்துள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரோ, ‘ம.பி.,யில், 2028 டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அதில், தன்னையே முதல்வர் வேட்பாளராக பா.ஜ., மேலிடம் அறிவிக்க வேண்டும் என்பதற்காகவே, மோகன் யாதவ் இப்படி நாடகமாடுகிறார்...’ என்கின்றனர். மோகன் யாதவோ, ‘எந்த விஷயத்தில் அரசியல் செய்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது...’ என கொந்தளிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை