உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / அரசியலுக்கு அழகல்ல!

அரசியலுக்கு அழகல்ல!

'புதிதாக அரசு பதவிக்கு வந்துள்ளார் அல்லவா; அதனால்தான் ஆட்டம் அதிகமாக இருக்கிறது...' என, ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் குறித்து பேசுகின்றனர், அங்குள்ள அரசியல்வாதிகள். இங்கு, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், ஜனசேனா கூட்டணி ஆட்சிநடக்கிறது. ஏற்கனவேஆளுங்கட்சியாக இருந்த,ஜெகன்மோகன் ரெட்டியின்ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தற்போது, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்து விட்டது. இதனால், பவன் கல்யாண்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தும், அவர் அதை ஏற்காமல், துணை முதல்வராகி விட்டார்; அதற்குப் பின், அவரது நடவடிக்கைகள் முற்றிலும் மாறி விட்டன.எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியதிருப்பதி லட்டு விவகாரத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விட, பவன் கல்யாண் தான், அதிகம் பேசப்பட்டார். ஏழுமலையானுக்கு விரதம், கோவிலை துாய்மைப்படுத்துவது என பரபரப்பாக காணப்பட்டார்; அதைவிட, சக நடிகர்களையும்வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தார். பவன் கல்யாணின் இந்த ஆக்ரோஷ அரசியல், ஆந்திராவில்உள்ள மூத்த அரசியல்வாதிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.'அவருக்கு இருக்கும் செல்வாக்கிற்கு, அரசியலில்இன்னும் பல உயரங்களை எட்டலாம். ஆனால், மிகவும்அவசரப்படுவதுடன், ஆத்திரமும் அவருக்குஅதிகம் வருகிறது; இது, அரசியலுக்கு அழகல்ல...' என்கின்றனர், ஆந்திர அரசியல்வாதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ