உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  வயிற்றெரிச்சலால் தகராறு!

 வயிற்றெரிச்சலால் தகராறு!

'பதவியேற்று, இன்னும் மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள், ஆளாளுக்கு கேள்வி கேட்க துவங்கி விட்டனரே...' என கவலைப்படுகிறார், காங்கிரஸ் அரசின் கேரள மாநில முதல்வரான வி.டி.சதீசன். காங்கிரசையும், கோஷ்டி பூசலையும் பிரிக்கவே முடியாது. அதிலும் கேரளாவில், கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தில் உள்ளது. சமீபத்தில், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் சதீசன் காரில் சென்றார்; பாதுகாப்பு போலீசாரும் உடன் சென்றனர். அப்போது, சேந்தி என்ற இடத்தில் காங்., கொடிகளுடன் திரண்ட கட்சி நிர்வாகிகள் சிலர், சதீசன் காரை தடுத்து நிறுத்தினர். காரில் இருந்த சதீசனிடம் உள்ளூர் நிர்வாகி ஒருவர், கோபத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தங்கள் பகுதியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பங்கேற்கும்படியும் சதீசனிடம் கேட்டார். பதிலுக்கு, சதீசனும் அந்த நபரிடம் எகிறவே, தகராறில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். பின், அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். 'நான் முதல்வர் பதவியில் அமர்ந்தது, எங்கள் கட்சியைச் சேர்ந்த பலருக்கே பிடிக்கவில்லை. அந்த வயிற்றெரிச்சலில் தான், இப்படி தகராறு செய் கின்றனர்...' என புலம்பியபடியே, புறப்பட்டுச் சென்றார் சதீசன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை