வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எல்லாம் அவரது மதம் படுத்தும்பாடு
'இப்போது எல்லா பழியையும் நம் மீது துாக்கி போட்டு வேடிக்கை பார்ப்பரே...' என்ற கலக்கத்தில்உள்ளார், ஜம்மு - காஷ்மீர் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான ஒமர் அப்துல்லா.மாநிலமாக இருந்த ஜம்மு - காஷ்மீர், 2019ல் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.மேலும், ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாக இருந்தாலும், அது, சட்டசபையுடன்கூடியதாக இருக்கும் என, மத்திய அரசு அறிவித்தது; இதன்படி, சமீபத்தில் அங்கு சட்டசபை தேர்தல் நடந்தது.சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் நடந்த முதல் சட்டசபை தேர்தல் என்பதால், அதன் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின; இதில், தேசிய மாநாட்டு கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.அந்த கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, முதல்வராக பதவியேற்றார்; ஆனால், அவரால் அந்த மகிழ்ச்சியை கொண்டாட முடியவில்லை. ஏனெனில், அவர் பதவியேற்ற நாள் முதல், பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக ஜம்மு - காஷ்மீர் முழுதும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதற்கு முன் குறைந்த அளவில் தான் தாக்குதல்கள் நடந்து வந்தன. தற்போது தாக்குதல் அதிகரித்துஉள்ளதால், முதல்வராக இருக்கும் ஒமர் அப்துல்லா செய்வதறியாது திகைக்கிறார். 'ஆரம்பமே நமக்கு ஆட்டம் காட்டுதே...' என புலம்புகிறார்.
எல்லாம் அவரது மதம் படுத்தும்பாடு