உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / கணக்கு தப்பா போச்சே!

கணக்கு தப்பா போச்சே!

'தேர்தல் நெருங்கும் நேரத்தில், கட்சியின் பெயரை கெடுக்கின்றனரே...' என்ற கவலையில் ஆழ்ந்துள்ளார், கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவரும், காங்., மூத்த தலைவருமான வி.டி.சதீஷன். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமை யிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தொடர்ச்சியாக இரண்டு சட்டசபை தேர்த லில் தோல்வி அடைந்த காங்கிரஸ், இந்த முறை வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் வியூகங்களை வகுத்து களம் இறங்கியுள்ளது. இந்நிலையில், கேரள மாநில காங்கிரசின் இளைஞர் அணி தலைவரும், பாலக்காடு எம்.எல்.ஏ.,வுமா ன ராகுல் மம்குட்டத்தில், தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, பிரபல மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதையடுத்து, பா.ஜ., மற்றும் வ.கம்யூ., கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் குதித்ததால், வேறு வழியின்றி இளைஞர் அணி தலைவர் பதவியை ராகுல் மம்குட்டத்தில் ராஜினாமா செய்துள்ளார்; ஆனாலும், தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். ஆயினும், இந்த விவகாரத்தை பா.ஜ., மற்றும் வ.கம்யூ., கட்சியினர் விடுவதாக தெரியவில்லை; தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். 'சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், முதல்வர் பதவியில் அமர்ந்து விடலாம் என கணக்கு போட்டிருந்தேன்; எல்லாவற்றையும் கெடுத்து விட்ட னரே...' என புலம்புகிறார் சதீஷன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ