உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / கடைசி அஸ்திரமும் காலி!

கடைசி அஸ்திரமும் காலி!

'எவ்வளவு கோலாகலமாக நடந்திருக்க வேண்டியதிருவிழா; இப்படி அனைத்தையும் கெடுத்து விட்டனரே...' என, நவராத்திரி பண்டிகை குறித்து கவலைப்படுகிறார், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.மேற்கு வங்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் துர்காபூஜை என்ற பெயரில் நடக்கும், நவராத்திரி பண்டிகை மிகவும் பிரசித்திபெற்றது. வீதிதோறும் துர்கைசிலைகளை வைத்து, 10 நாட்கள் வழிபாடு நடத்தி, இறுதி நாளில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் நீர் நிலைகளில் கரைப்பர். இந்தாண்டும், அதேபோன்ற கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், கோல்கட்டா அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து,அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. 'துர்கா பூஜையை காரணமாக கூறி, போராட்டங்களைஒடுக்கி விடலாம்' என, திட்டம் போட்டார் மம்தா; இதற்காக, 'தாண்டியா' நடனமாடுவது போன்ற வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்ததும், பலரும் கொதித்து விட்டனர். 'ரோம் பற்றி எரியும்போது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக இருக்கிறதே... நாங்கள், டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தும்போது, நீங்கள் நடனமாடுவது நியாயமா...' என, கடுமையாக அவரை பலரும் விமர்சித்தனர். இதனால் கலக்கம் அடைந்த மம்தா, 'போராட்டத்தைஅடக்குவதற்கு ஏவிய, கடைசி அஸ்திரமும் பலன் அளிக்காமல் போய் விட்டதே...' என, புலம்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை