உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / ‘நல்லதுக்கு காலம் இல்லை!’

‘நல்லதுக்கு காலம் இல்லை!’

‘அவர் எவ்வளவு பெரிய அறிவாளி; அவரை இப்படி அவமானப்படுத்தலாமா...?’ என, காங்கிரஸ் எம்.பி., சசி தரூரின் ஆதரவாளர்கள், தங்கள் கட்சி தலைமையை பார்த்து கேள்வி எழுப்புகின்றனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த சசி தரூர், ஐக்கிய நாடுகள் சபையில் உயரதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற பின், அரசியலுக்கு வந்தவர், காங்., ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் இடம் பெற்றார். சசி தரூர் அரசியலுக்கு வந்து பல ஆண்டுகளானாலும், இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை. போராட்டம், ஆர்ப்பாட்டம், அமளி, விவாதம் போன்றவை எல்லாம் அவருக்கு ஆகாது; ஆங்கில பத்திரிகைகளில் கட்டுரை எழுதுவது, கருத்தரங்குகளில் உரையாற்றுவது போன்ற மேல்மட்ட அரசியல் தான் செய்து வருகிறார். சமீபத்தில் சசி தரூர் அளித்த ஒரு பேட்டியில், ‘காங்கிரஸ் கட்சியில் இன்னும் சில விஷயங்கள் மேம்பட வேண்டும்; ஆளுங்கட்சிக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும்...’ என்றார். இதைக் கேட்டு கடுப்பான காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘நாங்கள் தினமும் போராட்டங்களை நடத்திக் கொண்டு தான் இருக்கிறோம். சசி தரூர் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுவதை சில காலம் ஒத்திவைத்து விட்டு, எங்களுடன் இணைந்து தெருவில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும்...’ என்றார். சசி தரூர் ஆதரவாளர்களோ, ‘நல்ல விஷயத்தை கூறினால், அதை ஏற்கும் மனநிலை காங்., தலைவர்களுக்கு இல்லையே...’ என புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை