உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  தப்பவே முடியாது!

 தப்பவே முடியாது!

'சில நாட்களுக்கு கூட நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் போலிருக்கிறதே...' என, மீண்டும் கண்களை கசக்குகிறார், டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால். டில்லியில், முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது, மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, அவர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது; இதையடுத்து, அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், சில மாதங்கள் சிறையிலும் அடைக்கப்பட்டார்; பின், ஜாமினில் வெளியில் வந்தார். இந்நிலையில், 'இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு எந்த தொடர்பும் இல்லை' என கூறி, அவரை டில்லி நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்தது. இதனால் உணர்ச்சி வசப்பட்ட கெஜ்ரிவால், நீதிமன்ற வளாகத்திலேயே ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இந்நிலையில் தான், 'மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக நாங்களும் விசாரித்து வருகிறோம். கெஜ்ரிவால் ஊழல் செய்தார் என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. சி.பி.ஐ., பிடியில் இருந்து அவர் தப்பினாலும், எங்கள் பிடியில் இருந்து தப்ப முடியாது...' என, அதிரடியாக அறிவித்துள்ளது, அமலாக்கத்துறை. கெஜ்ரிவால் தரப்பினரோ, 'எங்களை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட சதி நடக்கிறது...' என புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை