உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / ‘கார்கே பாணிக்கு மாறணும்!’

‘கார்கே பாணிக்கு மாறணும்!’

------‘இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே...’ என, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பாராட்டுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும். கடந்த மாதம், டில்லி ராம்லீலா மைதானத்தில் காங்., சார்பில் தசரா கொண்டாட்டங்கள் நடந்தன. இதில் பங்கேற்க, நாடு முழுதும் இருந்து ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும், நிர்வாகிகளும் வந்திருந்தனர். இந்த விழாவில் தலைவர்கள் பேசி முடித்த பின், ராவணன் உருவ பொம்மை எரிக்கப்படும். இதை காண்பதற்காக, காங்கிரஸ் தொண்டர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், தலைவர்கள் நீண்ட நேரம் பேசியதால், உருவ பொம்மை எரிக்கப்படுவது தாமதமானது. சோனியா, ராகுல் மற்றும் காங்கிரசின் மூத்த தலைவர்கள் ஒவ்வொருவராக பேசினர். இறுதியாக, மல்லிகார்ஜுன கார்கே பேச வேண்டும். அவர் பேச தொடங்கியபோது, தொண்டர்கள் பொறுமை இழந்து கோஷம் எழுப்பினர். பொறுத்து பொறுத்து பார்த்த கார்கே, ‘நீங்கள் அமைதியாக இருந்தால், ஐந்து நிமிடத்தில் பேச்சை முடித்து விடுவேன். கூச்சலிட்டபடியே இருந்தால், ஒரு மணி நேரத்துக்கு மேல் பேச வேண்டியிருக்கும்; வசதி எப்படி...’ என, மிரட்டலாக கேள்வி எழுப்பினார். இதை கேட்டதும், மைதானம் முழுதும் அமைதி நிலவியது. கார்கே, இரண்டரை நிமிடங்களிலேயே பேச்சை முடித்து விட்டார். அப்போது, அவருக்கு மிகப்பெரிய கைதட்டல் எழுந்தது. இதை பார்த்த காங்., நிர்வாகிகள், ‘அடுத்த கூட்டத்தில் நாமும் கைதட்டல் பெற வேண்டும் என்றால், கார்கே பாணியை பின்பற்ற வேண்டியது தான்...’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ