மேலும் செய்திகள்
பதிவுத்துறை 'உண்டியல் லேடி'யால் பலரும் கிலி
09-Sep-2025
'அரசியல் தகராறு, குழாயடி சண்டையை விட மோசமாக மாறி விட்டதே...' என, ஆந்திர அரசியல் பற்றி கவலையுடன் பேசுகின்றனர், அந்த மாநில மக்கள். ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் மைத்துனரும், பிரபல தெலுங்கு நடிகருமான பாலகிருஷ்ணா, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.,வாகவும் உள்ளார். திரைப்படங்களில் அதிரடியான சண்டை காட்சிகளில் நடித்து, பிரபலமானவர் பாலகிருஷ்ணா. எதையும் தடாலடியாக செய்து பரபரப்பை ஏற்படுத்துவார்; பொது வெளியிலும் தன்னை அதிரடி நபராகவே காட்டிக் கொள்வார். சமீபத்தில் சட்டசபையில் பேசிய பாலகிருஷ்ணா, முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை, 'சைக்கோ' என, கடுமையாக விமர்சித்தார். 'ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது, திரைத்துறையில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசுவதற்காக அவரிடம் அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலமான நடிகர்களை பல மணி நேரம் காத்திருக்க வைத்தார். ஒரு, 'சைக்கோ' போல் நடந்து கொண்டார்...' என்றார், பாலகிருஷ்ணா. இதனால், ஆத்திரம் அடைந்த ஜெகன்மோகன் ஆதரவாளர்கள், 'பாலகிருஷ்ணாவுக்கு பொது வெளியில் எப்படி பேச வேண்டும், நடந்து கொள்ள வேண்டும் என்றே தெரியாது; அவர் தான் உண்மையான சைக்கோ...' என, ஆவேசப்படுகின்றனர்.
09-Sep-2025