மேலும் செய்திகள்
அடுத்த துணை ஜனாதிபதி நிதிஷ் குமார்?
23-Jul-2025
'ஒரு பதவிக்கு இத்தனை பேர் ஆசைப்பட்டால் எப்படி...' என, ஆச்சரியப்படுகின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள். துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜக்தீப் தன்கர், யாரும் எதிர்பாராத வகையில், கடந்த வாரம் திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ., மேலிட தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே, இந்த ராஜினாமாவுக்கு காரணம் என, டில்லியில் பேசப்படுகிறது. ஆனால், பா.ஜ.,வில் உள்ளவர்களோ, 'நீதித்துறையுடன் ஜக்தீப் தன்கர் அடிக்கடி மோதலில் ஈடுபட்டதே பிரச்னைக்கு காரணம்...' என்கின்றனர்; எப்படியோ, துணை ஜனாதிபதி பதவி காலியாகி விட்டது. விரைவில், புதிய துணை ஜனாதிபதி தேர்வு செய்யப்பட உள்ளார். பார்லிமென்டில், கட்சிகளுக்கு இப்போதுள்ள பலத்தின் அடிப்படையில், பா.ஜ., தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் தான் வெற்றி பெறுவார். இதனால், துணை ஜனாதிபதி பதவியை பிடிக்க, தே.ஜ., கூட்டணிக்குள் கடும் போட்டி நிலவுகிறது. 'பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமாருக்கு தான் வாய்ப்பு' என, சிலர் பேசுகின்றனர். அதே நேரம், பா.ஜ.,வின் மூத்த தலைவர்களான முக்தர் அப்பாஸ் நக்வி, வசுந்தரா ராஜே சிந்தியா, சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட அரை டஜன் தலைவர்கள், துணை ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 'துணை ஜனாதிபதியாவதற்கு ஆயிரம் பேர் ஆசைப்படலாம்; ஆனால், யாருமே எதிர்பாராத ஒருவரைத் தான், பா.ஜ., மேலிடம் தேர்வு செய்யும்...' என்கின்றனர் , டில்லி அரசியல்வாதிகள்.
23-Jul-2025