'இவரது அரசியல் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதே இவரது வாய் தான்...' என, பஞ்சாப் மாநில காங்., முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துபற்றி கூறுகின்றனர், அங்குள்ள அரசியல்வாதிகள்.சித்து, இந்திய கிரிக்கெட் அணியின்முன்னாள் வீரர். கிரிக்கெட்டில் ஓய்வுபெற்றதும், அரசியலுக்குவந்தார். காங்கிரசில் இணைந்து, பஞ்சாப் மாநில அமைச்சராகவும்பதவி வகித்தார்.மூத்த தலைவர்களைகடுமையாக விமர்சித்ததால், கட்சி மேலிடம் அவரை ஓரம் கட்டி வைத்துள்ளது. சமீபத்தில்ஒரு நிகழ்வில் பேசிய சித்து, 'என் மனைவிக்குபுற்றுநோய் முற்றிவிட்டது. இன்னும், 40நாளில் இறந்து விடுவார் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.'அதன்பின், கடுமையான உணவு கட்டுப்பாட்டை என் மனைவி பின்பற்றினார். பால், கோதுமை, மைதா, சர்க்கரை போன்றவற்றை முழுமையாக நிறுத்தினார். எலுமிச்சை சாறு, துளசி இலை, மஞ்சள், வேப்பிலை ஆகியவற்றை மட்டும் உட்கொண்டதால் நோய் குணமடைந்து விட்டது...' என்றார்.சித்துவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 'அலோபதி சிகிச்சை முறையை பின்பற்றும் நோயாளிகளின் நம்பிக்கையை சீர்குலைக்கும்வகையில் சித்து பேசியுள்ளார்.'அலோபதி மருந்து சாப்பிடாமல், புற்றுநோயில் இருந்து தன் மனைவி குணமடைந்து விட்டார் என்பதை சித்து நிரூபிக்க வேண்டும். இல்லைஎனில், 850 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும்...' என, சத்தீஸ்கரைச் சேர்ந்த, 'சிவில் சொசைட்டி' என்ற அமைப்பு, சித்துவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.'சித்து, தன் வாய்க்கு பூட்டு போடாவிட்டால் முன்னேறவே முடியாது...' என்கின்றனர், சக அரசியல்வாதிகள்.