உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / ‘அதிகாரிகளை பழி வாங்குவதா?’

‘அதிகாரிகளை பழி வாங்குவதா?’

‘இது, ஆரோக்கியமான அரசியலாக தெரியவில்லை...’ என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள். எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் முறைகேடு நடந்ததாக கூறி, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்நிலையில், ஞானேஷ் குமாரை எப்படி பழி வாங்கலாம் என யோசித்து, தங்கள் ஆட்சி நடக்கும் மாநில அரசுகளை காங்., முடுக்கி விட்டுள்ளது. கேரளாவில், காங்கிரசை சேர்ந்த முதல்வர் சதீசன் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. தற்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், 2006ல் கேரள அரசில் பொதுப்பணித் துறை செயலராக பணியாற்றினார். அப்போது அவருக்கு எதிராக ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டதாக கூறி, அந்த விஷயத்தை 20 ஆண்டுகளுக்கு பின், தற்போதைய காங்கிரஸ் அரசு தோண்டி எடுத்துள்ளது. அந்த ஊழல் புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தும்படி, மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ‘பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ., தான் ஆளுங்கட்சியாக இருக்கிறது. இந்த மாநிலங்களில் பணியாற்றும் காங்கிரஸ் ஆதரவு அதிகாரிகளை கணக்கில் எடுத்து, அவர்கள் மீது பா.ஜ., அரசு நடவடிக்கை எடுத்தால் என்ன ஆகும்... அரசியல் லாபத்துக்காக அதிகாரிகளை பழிவாங்குவது சரியல்ல...’ என, பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை