அறிவியல் ஆயிரம்
அதிகரிக்கும் வெப்பநிலை
உலக வரலாற்றில் 2024 தான் வெப்பமான ஆண்டு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2023ல் பதிவான சராசரி வெப்பநிலையை விட, 2024ல் 0.12 டிகிரி செல்சியஸ் அதிகம். இது 2015ல் பாரிஸ் ஒப்பந்தம் நிர்ணயித்த அளவை மீறும் முதல் வருடமாக அமைந்துள்ளது. தொழில்வளர்ச்சிக்கு முந்தைய காலத்தில் (1850 - 1900) இருந்த சராசரி வெப்பநிலை அளவை விட, கூடுதலாக 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்துவதுதான் இந்த ஒப்பந்தம். ஆனால் 2024 இறுதியிலேயே இந்த கூடுதல் அளவான 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தொட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.