உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

செயற்கை மழை எப்படிசெயற்கை மழையை உருவாக்குவதில் 3 நிலைகள் உள்ளன. இதில் முதல்படி காற்றழுத்தம் உருவாக்குவது. மழை பெய்ய வேண்டிய இடத்திலுள்ள மேகங்கள் மீது கால்சியம் கார்பைடு, கால்சியம் ஆக்ஸைடு, யூரியா, அமோனியம் நைட்ரேட்டை துாவினால், அவை காற்றில் உள்ள ஈரத்தன்மையை உறிஞ்சி மழை மேகத்தை உருவாக்கும். இரண்டாவது சமையல் உப்பு, யூரியா, அமோனியம் நைட்ரேட்டை துாவி மழை மேகங்களை அதிகரிப்பது. இறுதியாக வெள்ளி அயோடைடு, உலர் பனி துாவினால் மேகங்களைக் குளிரச் செய்து நீர்த்துளிகளாக விழ வைக்கும்.தகவல் சுரங்கம்

உலக புத்தக தினம்

உடலுக்கு உடற்பயிற்சி போல மனதுக்கு புத்தகம் வாசித்தல். புத்தகம் படிப்பதை பழக்கமாக்கினால் தன்னம்பிக்கை வளரும். மக்களை நல்வழிப்படுத்துவதில் புத்தகம் சிறந்த வழிகாட்டி. உலகில் வாசித்தல், பதிப்பித்தல், அறிவாற்றல் சொத்துகளை பதிப்புரிமை மூலம் பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் ஏப். 23ல் உலக புத்தகம், பதிப்புரிமை தினம் கொண்டாடப் படுகிறது. புகழ்பெற்ற இலக்கிய வாதிகளான ஷேக்ஸ்பியர், செர்வாண்டிஸ், இன்கா கார்சிலாசோ போன்றோர் 1616 ஏப். 23ல் மறைந்தனர். இவர்களது பங்களிப்பை போற்றும் வகையில் இத்தினம் உருவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ