| ADDED : ஜூன் 17, 2024 09:04 PM
தாவரங்களின் அறிவுபூமியில் பல்வேறு வகை தாவரங்கள் வாழ்கின்றன. இந்நிலையில் மனிதர்களிடம் இருப்பதை போல இதில் சில வகை தாவரங்கள் நுண்ணறிவு மிக்கவை. அவற்றிடம் பிரச்னைகளை தீர்ப்பதற்கான திறமை உள்ளது என அமெரிக்காவின் கார்னல் பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தாவரங்களால் எண்ணுவது, தங்கள் உறவுகளை அடையாளம் காணுதல், பழைய நிகழ்வுகளை நினைவில் வைத்திருத்தல் உள்ளிட்ட பண்புகள் உள்ளன என ஆய்வில் கண்டறியப்பட்டது.தகவல் சுரங்கம்
உலக 'பிக்னிக்' தினம்
பரபரப்பான வாழ்க்கையில் இருந்து மனதை மகிழ்ச்சியாக வைக்க குடும்பம், நண்பர்களுடன் பிடித்த இடங்களுக்கு ''பிக்னிக்' செல்வது அவசியம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., சார்பில் ஜூன் 18ல் உலக பிக்னிக் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'பிக்னிக்' என்றாலே வேடிக்கை, சுத்தமான காற்று, சூரிய ஒளி, இயற்கை சூழல் போன்றவைதான் நினைவுக்கு வரும்.* பேச்சு, எழுத்து, உடல்மொழி என எவ்வகையிலும் வெறுப்பு பேச்சு இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூன் 18ல் சர்வதேச வெறுப்பு பேச்சு எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.