உள்ளூர் செய்திகள்

தகவல் சுரங்கம்

போதைப்பொருள் ஒழிப்பு தினம்உலக வர்த்தகத்தில் பெட்ரோல், ராணுவ தளவாடங்களுக்கு அடுத்து, சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் உள்ளது. ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடிக்கு போதைப்பொருள் வியாபாரம் நடக்கிறது என ஆய்வு தெரிவிக்கிறது. போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் விதமாக ஜூன் 26ல் சர்வதேச போதைப்பொருள், சட்டவிரோத கடத்தல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. போதைப்பொருளால் கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகிறது. 'ஆதாரம் தெளிவாக உள்ளது; தடுப்பு பணியில் முதலீடு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

அறிவியல் ஆயிரம்

தனிமையான தாவரம்பூமியில் பல்வேறு வகை தாவரங்கள் வாழ்கின்றன. இதில் தென் ஆப்ரிக்காவில் உள்ள 'என்சிபலரேட்டஸ் வுட்' என்பது உலகின் தனிமையான தாவரம் என அழைக்கப்படுகிறது. 1895ல் தென் ஆப்ரிக்காவின் ஜான் மெட்லே வுட், இதை கண்டுபிடித்தார். இதற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது உலகின் மிக அரிதான தாவரம். பார்ப்பதற்கு தென்னை மரம் போல இருக்கிறது. இதன் உயரம் 20 அடி. இதன் விட்டம் 12 - 20 இன்ச். கீழிருந்து உயரம் வரை 50 - 100 இலைகள் இருக்கும். ஒரு இலையின் நீளம் 150 - 250 செ.மீ. இத்தாவரத்தில் இதுவரை ஆண் இனம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை