அறிவியல் ஆயிரம்
'பென்னு'வின் ரகசியம்
அமெரிக்காவின் 'நாசா' 1999 செப். 11ல் '101955 பென்னு' விண்கல்லை கண்டுபிடித்தது. இது 450 கோடி ஆண்டு பழமையானது. விட்டம் 1610 அடி. இது 2182ல் பூமியை தாக்கும் வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால் இதன் பாறை, மண் மாதிரியை ஆய்வு செய்ய 2018ல் நாசா' அனுப்பிய 'ஆசிரிஸ்-ரெக்ஸ்' விண்கலம் 2023 செப்டம்பரில் பூமிக்கு திரும்பியது. இதை ஆய்வு செய்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு, இது சூரிய குடும்பம் உருவாவதற்கு முந்தையதாகவும், பூமிக்கு நீர், உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இதன் மூலம் கிடைத்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.