அறிவியல் ஆயிரம்
ஹைட்ரோ கார்பன் பயன்கள்
ஹைட்ரஜன், கார்பன் என இரு தனிமங்கள் இணைந்தது தான் ஹைட்ரோ கார்பன். இவை இயற்கை எரிவாயு, டீசல், பெட்ரோல், நிலக்கரி, சமையல் எரிவாயு, மீத்தேன் உள்ளிட்ட எரிபொருள்களில் முக்கிய கூறுகளாக உள்ளன. இவை வாயு, திரவம், திட என மூன்று வகைகளில் உள்ளன. இது எரிபொருள், பிளாஸ்டிக், ரப்பர், பிற தொழில்துறை ரசாயனங்களுக்கான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. 2024ன் படி உலக எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா (ஒரு நாளைக்கு 2.11 கோடி பேரல்) முதலிடத்தில் உள்ளது. சவுதி, ரஷ்யா, கனடா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.