அறிவியல் ஆயிரம்
உலகை முந்தும் எலன்மஸ்க்உலகின் விண்வெளி துறையில் அமெரிக்காவின் எலன் மஸ்க் முக்கிய பங்கு வகிக்கிறார். இவரது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சார்பில் பல விண்கலங்கள், செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதுதவிர சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று திரும்பும் விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்நிறுவனம் இதுவரை மொத்தம் 14,844 செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளன. இது மற்ற உலக நாடுகள் சேர்ந்து மொத்தமாக அனுப்பிய செயற்கைக்கோள்களை (15,062) விட, 218 தான் குறைவு. விரைவில் இதை முந்தி முதலிடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.