உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்விண்கல்லுக்கு இந்தியரின் பெயர்பிரபஞ்சம் உருவானபோது முழுமையான கோளாக உருவாகாமல் நின்றுபோன சிறிய பாறைப்பொருட்கள்தான் விண்கல். 1801ல் முதன்முதலில் விண்கல்லை கண்டுபிடித்தவர் இத்தாலியின் கியூசெப்பே கியாசி. 10 லட்சம் விண்கல் இருக்கலாம் என விஞ்ஞானிகள்கணித்துள்ளனர். இவை செவ்வாய் - வியாழன் கோள்களுக்கு இடையே சுற்றுகின்றன. இதுவரை 34 ஆயிரம் விண்கற்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துஉள்ளனர். இந்நிலையில் இந்திய பேராசிரியர் ஜெயந்த் மூர்த்தியின் பெயரை ஒரு விண்கல்லுக்கு சூட்டி கவுரவித்துஉள்ளது சர்வதேச வானவியல் அமைப்பு.தகவல் சுரங்கம்ஐ.நா., ஊழியர்களுக்கு பாதுகாப்புசர்வதேச நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா., சபை ஊழியர்களை பாதுகாக்கும் விதமாக மார்ச் 25ல் ஐ.நா., சார்பில் கைது செய்யப்பட்ட, காணாமல் போன ஊழியர்களுடன் ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1945ல் ஐ.நா., சபை தொடங்கிய பின் நுாற்றுக்கணக்கான ஆண், பெண் ஊழியர்கள் பணியில் இருந்த போது உயிரை இழந்துள்ளனர். 1990களில் ஐ.நா., அமைதிப்படையில் பணியாற்றிய வீரர்கள் பலர் பலியாகினர். இதையடுத்து ஐ.நா., ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் என ஐ.நா., சபை முடிவெடுத்து இத்தினம் உருவாக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை