உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்விண்வெளி பயணம்விண்வெளி வளர்ச்சியின் துவக்கமாக 1957 அக். 4ல் உலகின் முதல் செயற்கைக்கோளான ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்' செலுத்தப்பட்டது. 1961 ஏப். 12ல் முதன்முதலாக விண்வெளிக்கு சென்று சாதித்தவர் ரஷ்யாவின் யூரி காகரின். இச்சாதனையை அங்கீகரித்தல், விண்வெளியை ஆக்கப்பூர்வ, அமைதி வழியில் பயன்படுத்த வலியுறுத்தி ஏப்.12ல் மனிதர்களின் விண்வெளி பயணத்துக்கான சர்வதேச தினம் கடை பிடிக்கப்படுகிறது. இன்று நிலவு, செவ்வாய் கோள்களில் மனிதன் வசிப்பதற்கான சூழல் பற்றி ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு விண்வெளி துறை வளர்ச்சி பெற்றுள்ளது.தகவல் சுரங்கம்ஒரு தொகுதியில் 480 பேர்1996 லோக்சபா தேர்தலில் ஆந்திராவின் (தற்போது தெலுங்கானா) நல்கொண்டா தொகுதியில் 480 பேர் போட்டியிட்டனர். இதில் 477 பேர் டெபாசிட் இழந்தனர். இ.கம்யூ., வின் தர்ம பிக்சம் வென்றார். அதே தேர்தலில் கர்நாடகாவின் பெல்காம் தொகுதியில் 456 பேர் போட்டியிட்டு 454 பேர் டெபாசிட் இழந்தனர். ஜனதா தளத்தின் சிவானந்த் வென்றார். நல்கொண்டாவில் குடிநீர் பிரச்னை, பெல்காமில் அப்பகுதியை மஹாராஷ்டிராவுடன் இணைக்க வலியுறுத்தி இவ்வளவு பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலுக்குப்பின் டெபாசிட் கட்டணம் ரூ.500ல் இருந்து ரூ.25,000 என உயர்த்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி