உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்எது வெப்ப அலைதமிழகம் உட்பட பல மாநிலங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. வெப்ப அலை வீசுவது பற்றி அவ்வப் போது வானிலை மையமும் எச்சரிக்கை வெளியிடுகிறது. வெப்ப அலை என்பது ஒரு பகுதியில் நிலவும் இயல்பு வெப்பநிலையை விட கூடுதலாக 3 டிகிரி செல்சியஸ், தொடர்ந்து 3 நாளுக்கு மேல் இருந்தால் அது வெப்ப அலை என இந்திய வானிலை மையம் குறிப்பிடுகிறது. இதன்படி சமவெளி பகுதியில் 40 டிகிரிக்கு மேல், மலைப்பகுதிகளில் 30 டிகிரிக்கு மேல், கடலோர பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பம் நிலவினால் அது வெப்ப அலையாக கருதப்படுகிறது.தகவல் சுரங்கம்உலக மலேரியா தினம்மலேரியா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.நா.,சார்பில் ஏப். 25ல் உலக மலேரியா தினம் கடை பிடிக்கப் படுகிறது. 'சமமான உலகத்திற்காக மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தை துரிதப்படுத்துதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி மூலமாக மலேரியா ஏற்படுகிறது. இது அனோபிலிஸ் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக்கொள்கிறது. இது ஒருவரை கடிப்பதின்மூலம் மலேரியா பரவுகிறது. 2022ல் 24.90 கோடி பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டனர். 6.08 லட்சம் பேர் பலியாகினர். இதில் 94 சதவீதம் பேர் ஆப்ரிக்காவை சேர்ந்தவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ