உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்வெள்ளியில் எரிமலைசூரியனில் இருந்து இரண்டாவதாக உள்ள கோள் வெள்ளி. 1990களில் இதை படம் பிடித்து ஆய்வு செய்த தரவுகளை தற்போது இத்தாலியின் பெஸ்காரா பல்கலை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில் அங்கு இரண்டு பகுதிகளில் பதிவான எரிமலை தற்போதும் 'ஆக்டிவ்' ஆக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். வெள்ளி கோளில் கார்பன் டை ஆக்சைடு (96.5%) அதிகம் உள்ளது. இதன் வெப்பநிலை 465 டிகிரி செல்சியஸ். அளவில் பூமியை போல ஒத்திருப்பது, அருகில் இருப்பது உள்ளிட்ட காரணத்தால் இது 'பூமியின் இரட்டை சகோதரி' எனவும் அழைக்கப்படுகிறது.தகவல் சுரங்கம்புகையிலை இல்லா உலகம்புகையிலையின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அதன் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி மே 31ல் உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலையால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சிகரெட் தயாரிப்பதற்காக 60 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன. புகை பிடிப்பதால் அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. புகைப்பவருக்கு அருகில் நிற்பவருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. 'புகையிலை தொழிற்சாலையில் இருந்து சிறுவர்களை பாதுகாத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை