| ADDED : ஜூலை 12, 2024 06:32 PM
அறிவியல் ஆயிரம்கடல் காற்று வீசுவது எப்படிபகல் நேரத்தில் நிலப்பரப்பு, கடல் நீரைவிட அதிகம் சூடாகிறது. இதனால் நிலப்பரப்பில் உள்ள சூடான காற்று மேலே எழும்புகிறது, கடல் பரப்பிலிருந்து குளிர்ந்த காற்று நிலப்பரப்பை நோக்கி வீசுகிறது. இதன் பெயர் கடல்காற்று. இரவில் நிலப்பரப்பு, கடல் நீரைவிட குளிர்வடைகிறது. இதனால் கடல் பரப்பில் உள்ள சூடான காற்று மேலே எழும்ப, நிலப்பரப்பிலிருந்து குளிர்ந்த காற்று கடல் பகுதி நோக்கி வீசுகிறது. இதற்கு நிலக்காற்று என பெயர். காற்றானது அழுத்தம் அதிகமான பகுதியிலிருந்து குறைந்தழுத்த பகுதிக்கு செல்கிறது.தகவல் சுரங்கம்பெண் எம்.பி.,க்களின் பலம்18வது லோக்சபாவில் (2024 தேர்தல்) மொத்தமுள்ள 543 எம்.பி.,க்களில் 74 பெண்கள் உள்ளனர். சதவீதம் 13.62. இது 2019 தேர்தலை விட 4 பேர் குறைவு. லோக்சபா வரலாற்றில் அதிக பெண் எம்.பி.,க்கள் வென்றது 2019 தேர்தலில் தான். 1952ல் நடந்த முதல் லோக்சபா தேர்தலில் 22 பெண்கள் தேர்வாகினர். சதவீதம் 4.4. பின் 1957 தேர்தலில் 27, 1962ல் 34, 1967ல் 31 எம்.பி.,க்கள் தேர்வாகினர். 2004 தேர்தல் வரை இந்த எண்ணிக்கை 50க்குள் தான் இருந்தன. 2009ல் 59 பேர், 2014ல் 61 பெண்கள் எம்.பி.,யாக தேர்வாகினர்.