உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அக். 6 – தாவரங்களுக்கு உணவு எப்படி

அக். 6 – தாவரங்களுக்கு உணவு எப்படி

மனிதர்கள், விலங்குகள் போல தாவரங்களுக்கும் உணவு தேவை. ஆனால் அவற்றுக்கு தேவையான உணவை தானாகவே ஒளிச்சேர்க்கை மூலம் தயாரித்துக்கொள்ளும். ஒளிச்சேர்க்கை என்பது பச்சையம் (குளோரோபில்), நீர், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றை பயன்படுத்தி உணவை தயாரிக்கும் முறை. வேர்களின் வழியாக நீர் உறிஞ்சப்பட்டு இலைகளுக்கு அனுப்பப்படுகிறது. இலைகளின் துளைகள் வழியே காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடு உள்ளிழுககப்படுகிறது. இலையில் உள்ள பச்சையம் சூரிய ஒளியை எடுத்துக்கொள்ள உதவுகிறது. இதுவே இலையின் பச்சை நிறத்துக்கும் காரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !