அறிவியல் ஆயிரம் : வியாழனில் நடக்கலாமா...
அறிவியல் ஆயிரம்வியாழனில் நடக்கலாமா...சூரிய குடும்பத்தில் பெரிய கோள் வியாழன். ஆயிரம் பூமியை உள்ளடக்கலாம். இந்நிலையில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் கோள்களுக்கு போல நிலப்பகுதி, புல், துாசி வியாழனில் இல்லை. இதனால் அங்கு நடக்கவோ, விண்கலத்தை தரையிறக்கவோ முடியாது என ஆய்வு தெரிவித்துள்ளது. வியாழன் கொந்தளிப்பான வாயுவினால் நிறைந்தது. சில இடங்களில் மணிக்கு 650 கி.மீ., வேகத்தில் காற்று வீசுகிறது. வியாழன் மேல் அடுக்கு ஹைட்ரஜன், ஹீலியம் வளிமண்டலத்தால் ஆனது. இந்த வாயுவின் அழுத்தம் என்பது ஆழம் செல்ல செல்ல மேலும் அதிகரிக்கிறது.