அறிவியல் ஆயிரம் : காக்கும் கதிரியக்கவியல்
அறிவியல் ஆயிரம்காக்கும் கதிரியக்கவியல்நவீன மருத்துவத் துறையில் கதிரியக்கவியல் (ரேடியாலஜி) நிபுணர்களின் பங்கு முக்கியமானது. ஜெர்மனி இயற்பியலாளர் ரான்ட்ஜென் 1895 நவ.8ல், 'எக்ஸ்-ரே' கருவியை கண்டுபிடித்தார். இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக நவ. 8 உலக கதிரியக்கவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எலும்பு முறிவு, காயங்களின் தன்மை உட்பட உடலுக்குள் ஊடுருவி சென்று படம் பிடித்து காண்பிக்கும் 'எக்ஸ் -ரே' பல வழிகளிலும் பயன்படுகிறது. ரான்ட்ஜெனின் கண்டுபிடிப்புக்கு 1901ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.