அறிவியல் ஆயிரம் : குழந்தைகளை பாதிக்கும் காலநிலை
அறிவியல் ஆயிரம்குழந்தைகளை பாதிக்கும் காலநிலைஉலகில் கடலோர வெள்ளம், வறட்சி, அதீத வெப்பம், காட்டுத்தீ, வெப்ப அலை, துாசி புயல், ஆற்று வெள்ளம், வெப்பமண்டல புயல் ஆகிய எட்டு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்து காரணிகளால் குழந்தைகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது என ஐ.நா., தெரிவித்துள்ளது. இதில் குறைந்தது மூன்று ஆபத்துகளில் உலக குழந்தைகளில் 50 சதவீதம் பேர் (110 கோடி), குறைந்தது ஒரு ஆபத்தில் 230 கோடி குழந்தைகள் பாதிக்கும் வாய்ப்புள்ளது. ஆபத்து காரணிகளில் அதிகபட்சமாக வறட்சி (180 கோடி பேர்) தான் முதலிடத்தில் உள்ளது. குழந்தைகளின் உடல்நிலை, கல்வி பாதிக்கப்படலாம்.