அறிவியல் ஆயிரம்: மீத்தேன் மழை தெரியுமா...
அறிவியல் ஆயிரம்'மீத்தேன் மழை' தெரியுமா...சூரிய குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன. இதில் சனி கோளுக்கு தான் அதிக நிலவுகள் (274) உள்ளன. இதில் பெரியது 'டைட்டன்' நிலவு. மேலும் சூரிய குடும்பத்தில் உள்ள நிலவுகளில் அடர்த்தியான வளிமண்டலம் இருப்பது இந்த 'டைட்டன்' நிலவுக்குத்தான். அதே போல சூரிய குடும்பத்தில் பூமியை தவிர ஆறு, ஏரி கடல் இருப்பது இதற்கு மட்டும் தான். ஆனால் 'டைட்டன்' நிலவில் மழை என்பது தண்ணீராக இருக்காது. மாறாக திரவ மீத்தேன், ஈத்தேனாக இருக்கும். டைட்டன் நிலவில் மேற்பரப்பு குளிராக இருப்பதால் மீத்தேன் திரவமாக இருக்கிறது.