உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்கூடுது வெப்பம்.... உருகுது பனிஅண்டார்டிகா முழுவதும் பனியால் சூழப்பட்டது. இங்கு மனிதர்கள் வசிக்க முடியாது. ஆய்வுக்காக மட்டும், சில நாடுகளின் விஞ்ஞானிள் இங்கு தங்கி ஆராய்ச்சி செய்கின்றனர். இந்நிலையில் அண்டார்டிகாவின் மொத்த பனிப்படலத்தின் அளவு, வழக்கமாக இருப்பதை விட 19.94 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு குறைந்துள்ளது. 2023 குளிர்காலத்தில் இருந்ததை விட 22 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு குறைவு என ஆய்வு தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக வெப்பநிலை உயர்வதே இதற்கு காரணம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.தகவல் சுரங்கம்உலக ஆமைகள் தினம்ஆமை இனங்களை அழிவிலிருந்து பாதுகாக்க வலியுறுத்தி 2000 முதல் ஆண்டுதோறும் மே 23ல் உலக ஆமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சித்தாமை, அலுங்காமை, பச்சை ஆமை, பெருந்தலை ஆமை உட்பட 300க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இதன் ஆயுட்காலம் 150 - 300 ஆண்டுகள் வாழும். ஊர்வன இனத்தை சேர்ந்த இவை 50 -200 முட்டை இடும். கடல் ஆமைகளில் மிகச்சிறியது சித்தாமை. ஆமைகள் மணிக்கு 5.5 கி.மீ., வேகத்தில் செல்வதால் எளிதில் சுறா, திமிங்கலங்களுக்கு இறையாகின்றன. மன்னார் வளைகுடா, வங்கக்கடலில் வாழ்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ