உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்மாங்காய் புளிப்பது ஏன்முக்கனிகளில் ஒன்று மாம்பழம். இதில் பல்வேறு சத்துகள் உள்ளன. இதில் புளிப்பாக இருக்கும் மாங்காய், பழுத்தவுடன் இனிப்பாக மாறுகிறது. இதற்கு காரணம் மாங்காயாக இருக்கும் போது அதில் கரிம அமிலங்கள் அதிகமாகவும், இனிப்பு சுவை குறைவாகவும் இருக்கும்.இந்நிலையில் மாங்காய் பழுக்க ஆரம்பிக்கும்போது அதிலுள்ள கரிம அமிலங்களின் அளவு குறைய துவங்குவதால் புளிப்பும் குறையும். அதேநேரம் அதிலுள்ள குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை வகையின் அளவு அதிகரிக்கும். இதனால் தான் மாம்பழம் இனிக்குது.தகவல் சுரங்கம்உலக ரத்த தான தினம்ரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி உலக சுகாதாரநிறுவனம் சார்பில் ஜூன் 14ல் உலக ரத்த தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. '20 வருட கொடையின் கொண்டாட்டம்: ரத்த தானம் செய்தவர்களுக்கு நன்றி' என்பது இந்தாண்டு மையக்கருத்து. நல்ல உடல்நிலையில் உள்ள 18 - 65 வயதுடைய எவரும் ரத்த தானம் செய்யலாம். உடல் எடை குறைந்தது 50 கிலோ இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவற்றை பரிசோதனை செய்த பின் ரத்த தானம் செய்ய வேண்டும். 350 மில்லி மட்டுமே தானத்துக்கு எடுக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை