உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்காற்று வீசுவது எப்படிமரம் ஆடுவதால் காற்று வீசுகிறதா, காற்று வீசுவதால் மரம் ஆடுகிறதா என ஆராய்ந்தால் காற்று வீசுவதால் தான் மரங்கள் ஆடுகின்றன. சூரிய வெப்பம் நிலத்தையும் கடல் நீரையும் சூடுபடுத்தும். இது அனைத்து இடத்திலும் ஒரே அளவு இருக்காது. எனவே ஒப்பீட்டளவில் கூடுதல் சூடு அடைந்த பகுதியிலிருந்து வெப்பமுறும் காற்று, அடர்த்தி குறைந்து மேலே எழும்பும். இந்த குறை காற்றழுத்தப் பகுதியை நோக்கி, உலகின் பிற பகுதியிலிருந்து காற்று செல்லும். இதுவே காற்று வீசுவது என கூறுகிறோம். எனவே அடிப்படையில் காற்று வீசுவது சூரிய ஒளியின் வினையால்தான்.தகவல் சுரங்கம்ஆயுத தொழிற்சாலை தினம்மத்திய அரசின் கீழ் செயல்படும் ஆயுத தொழிற்சாலை வாரியம் 1787ல் மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட்டது. 1802 மார்ச் 18ல் உற்பத்தி தொடங்கியது. இந்நாளே (மார்ச் 18ல்) ஆயுத தொழிற்சாலை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இது 'பாதுகாப்பு துறையின் நான்காவது கை' என அழைக்கப்படுகிறது. இதன்கீழ் 41 ஆயுதத் தொழிற்சாலைகள், 9 பயிற்சி நிறுவனங்கள், மூன்று மண்டல மார்க்கெட்டிங் மையங்கள் செயல்படுகின்றன. தரை, ஆகாயம், கடல் பகுதி பாதுகாப்புக்கு தேவையான ஆராய்ச்சி, மேம்பாடு, தயாரிப்பு, பரிசோதனை பிரிவுகளில் செயல்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ