அறிவியல் ஆயிரம் : மின்னல் வேக ரோபோ
அறிவியல் ஆயிரம்மின்னல் வேக ரோபோஉலகின் 'மின்னல் மனிதன்' என அழைக்கப்படுபவர் ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட். இவர் 2009-ல் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் மணிக்கு 44.70 கி.மீ., வேகத்தில் ஓடி உலக சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் இவரை மிஞ்சும் விதத்தில் சீனாவின் யுனிட்ரி நிறுவனம் ரோபோவை உருவாக்கி, அதன் வீடியோவையும் வெளியிட்டு உள்ளனர். இதன் பெயர் 'சூப்பர் மேன்'.இது மணிக்கு 45.54 கி.மீ., வேகத்தில் ஓடும். மேலும் 6.5 அடி உயரமும் தாண்டுகிறது. இந்த ரோபோவின் விலை ரூ.12.91 லட்சம்.