அறிவியல் ஆயிரம் : யுரேனஸ்க்கு புதிய நிலவு
அறிவியல் ஆயிரம்யுரேனஸ்க்கு புதிய நிலவுசூரிய குடும்பத்தில் ஏழாவது கோள் யுரேனஸ். இது பூமியில் இருந்து 260 கோடி கி.மீ., துாரத்தில் உள்ளது. சூரியனை ஒருமுறை சுற்றிவர 84 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு 29 நிலவுகள் உள்ளன. இந்நிலையில் யுரேனஸ் கோளில் புதிய நிலவை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. இது சிறிய நிலவாக உள்ளது. இதன் அகலம் 10 கி.மீ., இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது யுரேனஸின் மையப்பகுதியில் இருந்து 56 ஆயிரம் கி.மீ., துாரத்தில் உள்ளது. மற்ற எந்த கோளுக்கும் இதுபோன்ற சிறிய நிலவுகள் இல்லை.