அறிவியல் ஆயிரம் : விண்வெளியில் உயிரினங்கள்
அறிவியல் ஆயிரம்விண்வெளியில் உயிரினங்கள்இன்று விண்வெளிக்கு விஞ்ஞானிகள் பலர் சென்று வருகின்றனர். ஆனால் விண்வெளி பயணத்தின் துவக்க காலத்தில் விண்வெளிக்கு மனிதர்களுக்கு பதிலாக பூச்சி, குரங்கு, நாய், ஆமை உள்ளிட்ட உயிரினங்கள் தான் அனுப்பப்பட்டன. அதன்படி 1957ல் சோவியத் யூனியன் (ரஷ்யா) சார்பில் அனுப்பிய 'லைகா' நாய், விண்வெளிக்கு சென்ற முதல் உயிரினம். ஆனால் இப்பயணத்தில் தன் உயிரை இழந்தது. அதுபோல 1960 ஆக. 19ல் ரஷ்யா அனுப்பிய 'பெல்கா', 'ஸ்டெர்ல்கா' ஆகிய இரு நாய்களும், விண்வெளிக்கு சென்று பத்திரமாக பூமிக்கு திரும்பிய முதல் உயிரினங்கள்.