அறிவியல் ஆயிரம் : நிலநடுக்கத்தால் நகர்ந்த தீபகற்பம்
அறிவியல் ஆயிரம்நிலநடுக்கத்தால் நகர்ந்த தீபகற்பம்ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சமீபத்தில் நிலநடுக்கம் (8.8 ரிக்டர்) ஏற்பட்டது. சுனாமி அலை உருவாகியது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் கிராஷெனின்னிகோவ் எரிமலை, 500 ஆண்டுக்குப்பின் வெடித்து லாவாவை வெளியிட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது யுரேசியன், பசிபிக் நிலத்தட்டுகள் மோதிய அழுத்தத்தால் கம்சட்கா தீபகற்பத்தின் தென்முனை பகுதி, 6.5 அடி அளவுக்கு தென் கிழக்கு திசையில் நகர்ந்துள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2011ல் ஜப்பானின் டோஹோகு நிலநடுக்கத்தின் போது இதே போல அப்பகுதி நகர்ந்தது.