அறிவியல் ஆயிரம் : மேகங்கள் மிதக்க காரணம்
அறிவியல் ஆயிரம்மேகங்கள் மிதக்க காரணம்கடல் நீரின் மீது இரும்பு, கல் உள்ளிட்ட பொருளை எறிந்தால் அது நீரில் மூழ்குகிறது. ஆனால் ரப்பர் பந்தை எறிந்தால் அது மிதக்கும். இதற்கு காரணம் காற்றடைத்த ரப்பர் பந்தின் அடர்த்தி, நீரைவிடக் குறைவு. நீரைவிட அடர்த்தி குறைவான பொருட்கள் நீரில் மிதக்கும். வளிமண்டலம் என்பதும் கடல் நீர் போல ஒரு பாய்மம். காற்றைவிட அடர்த்தி குறைவான பொருட்கள் அதில் மிதக்கும். எனவேதான் வெப்பமான புகை மேலே எழுகிறது. வெப்பம் மிகுந்த நீராவியைச் செறிவாகக் கொண்டுள்ள மேகத்தின் அடர்த்தி, காற்றின் அடர்த்தியை விடக் குறைவு என்பதால் மேகங்கள் மிதக்கின்றன.