அறிவியல் ஆயிரம்: திமிங்கலத்தின் நீண்டதுார பயணம்
அறிவியல் ஆயிரம்திமிங்கலத்தின் நீண்டதுார பயணம்'ஹம்பேக்' என்ற திமிங்கலம் மிக நீண்டதுாரத்துக்கு இடம் பெயர்ந்துள்ளது. இது இதுவரை பதிவான திமிங்கலங்களின் பயணத்தில் நீண்டதுாரமாக இருக்கலாம் என ஆய்வு தெரிவித்துள்ளது. இது 2017ல் பசிபிக் கடலில் கம்போடியாவில் தென்பட்டது. சில ண்டுக்குப்பின் 2022ல் இந்திய பெருங்கடலில் ஜான்ஜிபார் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. இரண்டுக்குமான துாரம் 13 ஆயிரம் கி.மீ. பருவநிலை மாற்றத்தால் அதன் உணவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்தளவுக்கு பயணித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.