அறிவியல் ஆயிரம் : டயர் கருப்பாக இருப்பது ஏன்
அறிவியல் ஆயிரம்டயர் கருப்பாக இருப்பது ஏன்ஒவ்வொரு வாகனத்தின் நிறங்கள் வேறுபட்டாலும் அனைத்து வாகனங்களின் டயர்கள் கறுப்பு நிறத்தில் தான் இருக்கும். துவக்க காலத்தில் வெள்ளை நிறத்தில் தான் டயர்கள் தாரிக்கப்பட்டது. ஆனால் அவை நீண்ட காலம் உழைக்க வில்லை. அதனால் தூய்மையான ரப்பருடன் 'கார்பன் பிளாக்' வேதி சேர்மத்தை கலந்து டயர்கள் தயாரிக்கப்பட்டன. இதனால் தான் டயர் கறுப்பாக உள்ளது. உராய்வு காரணமாக டயரில் ஏற்படும் வெப்பத்தை 'கார்பன் பிளாக்' கடத்துவதால் டயருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கிறது. இது சூரியனின் புற ஊதாக்கதிர்களை ஈர்த்து வாகனத்தின் மற்ற பகுதி வெப்பமாக்காமல் தடுக்கிறது.