அறிவியல் ஆயிரம் : நட்சத்திரத்தில் தண்ணீர்
அறிவியல் ஆயிரம்நட்சத்திரத்தில் தண்ணீர்பூமியில் இருந்து 450 ஒளி ஆண்டுகள் (ஒரு ஒளி ஆண்டு என்பது ஓராண்டில் ஒளி பயணிக்கும் தொலைவு) துாரத்தில் உள்ள 'எச்.எல். டவுரி' நட்சத்திரம். இது 'டாரஸ்' விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு இளம் நட்சத்திரம். இதன் வயது 1 லட்சம் ஆண்டுகளுக்கு குறைவு. இந்நட்சத்திரம் தொடர்பாக 'ஆல்மா' டெலஸ்கோப் வழியாக ஆய்வு நடத்திய இத்தாலியின் மிலன் பல்கலை விஞ்ஞானிகள், இதில் நீராவியாக உள்ள தண்ணீரின் அளவு, பூமியின் கடல்களில் உள்ள மொத்த நீரின் அளவை விட மூன்று மடங்கு அதிகம். இது கோளின் பிறப்பிடமாக இருக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர்.