உள்ளூர் செய்திகள்

அறிவியல் ஆயிரம்

பலுான் பறக்கும் ரகசியம்பலுானில் உள்ள காற்றை வெப்பப்படுத்தும்போது அது விரிவடைகின்றது. இதன் காரணமாக பலுானில் உள்ள காற்றின் அடர்த்தி குறைகிறது. அதனால் பலுானில் உள்ள காற்றின் அடர்த்தி, வெளிப்புறத்தில் உள்ள காற்றின் அடர்த்தியைவிட குறைகிறது. இந்த அடர்த்தி வேறுபாட்டின் காரணமாக வெப்பக்காற்று அடைக்கப்பட்ட பலுான், காற்றில் மிதக்கின்றது. நெருப்பு என்பது காற்று சேர்ந்த வெப்பமான புகைதான். ஆகவே அடர்த்தி குறைவான நெருப்புப் பிழம்பும், அதிலிருந்து வரும் புகையும் புவிஈர்ப்புவிசையை மீறி மேல்நோக்கி எரிகின்றன.தகவல் சுரங்கம்முதல் சூரிய உதயம்பூமியில் சூரிய உதயத்தை முதலில் பார்க்கும் நாடு கிரிபாதி. இது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அமைந்துள்ள ஓசானியா பகுதியில் மத்திய பசிபிக் கடலில் அமைந்துள்ள சிறிய தீவு நாடு. இந்நாட்டில் 32 தீவுகள், பவளப்பாறைகள் அடங்கிய ஒரு தீவு உள்ளது. 1979 ஜூலை 12ல் பிரிட்டன், அமெரிக்காவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. பரப்பளவு 811 சதுர கி.மீ. மக்கள்தொகை 1.21 லட்சம். இதன் அங்கீகரிக்கப்பட்ட மொழி ஆங்கிலம், கில்பர்டீஸ். உலகில் புத்தாண்டை முதலில் வரவேற்பதும் இந்நாடுதான். அங்கு காலை 11:30 மணி எனில் இந்தியாவில் அதிகாலை ௫:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ