உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / வாசகர்களை மாண்போடு அணுகும் நாளிதழ்!

வாசகர்களை மாண்போடு அணுகும் நாளிதழ்!

அரசு, அதிகாரம், நீதிப் பரிபாலனம் என்ற முக்காலிகளின் மேல் வீற்றிருக்கும் ஜனநாயக அரியணை பலமாக இருக்கிறதா என சோதிக்கும் காவல் அரணே ஊடகம். எட்டு தசாப்தங்களுக்கு முன்பு, அப்போதிருந்த குறைவான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு, இந்த அரண் காக்கும் பணியைத் தொடங்கியது தினமலர். இன்று தொழில்நுட்பத்தின் உச்சத்தில், அனைத்து சாத்தியங்களையும் உள்ளடக்கி தன்னுடைய கண்காணிப்புப் பணியை செவ்வனே நிறைவேற்றி நடைபோடுவதைப் பார்க்கும் போது, ஓர் எளிய வாசகனாக 'தினமலர்' நாளிதழ் நூற்றாண்டு கடந்து கோலோச்ச வேண்டுமென உள்ளம் குளிர வாழ்த்துகிறேன். ஊடகம் என்பதும் ஒரு தொழிலாக மாறி விட்ட இந்தக் காலத்தில், நாளிதழ்களை வாங்குபவர்களை 'பயனர்' என வர்த்தக நோக்கில் சுருக்காமல், அவர்களை 'வாசகர்கள் , பார்வையாளர்கள், கேட்பவர்கள்# என மாண்போடு அணுகும் போக்கிற்கு உதாரணம் தினமலர் நாளிதழில் வெளிவரும் வெவ்வேறு பகுதிகளே சான்று! குடும்பத்தின் அனைத்து தரப்பு உறுப்பினர்களுக்கும் தேவையான செய்திகளை, கட்டுரைகளை, ஆய்வுகளை வெளியிட்டு வரும் தினமலர் வெறுமனே செய்திகளை மக்களுக்குச் சேர்க்கும் நிறுவனம் மட்டுமல்ல, கருத்துருவாக்கக் கருவியாகவும் செயல்பட்டு வருகிறது. அரசைப் பாராட்ட வேண்டிய தருணங்களில் கைதட்டிப் பாராட்டுவதும், கை குலுக்கி மக்களின் குரலை அரசின் காதுகளுக்கு எட்டச் செய்வதும் என இருவழிப் பாதையில் பயணிப்பதே ஊடகத்தின் ஆகச் சிறந்த அறமாக இருக்க முடியும். இந்த அறவழிப் பாதையில் தொடர்ந்து வீறுநடைபோடும் தினமலர் பணி தொய்வின்றித் தொடர வாழ்த்துகள்! அன்புடன் ராஜ்மோகன், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Prakash
ஜூலை 31, 2026 12:44

தினமலர் ஒரு மிகச்சிறந்த நாளிதழ், அதை யாராலும் மறுக்க முடியாது. எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து, அதாவது 1999-ஆம் ஆண்டில் இருந்தே நான் தினமலர் படித்து வருகிறேன். இன்றைய லேட்டஸ்ட் டிரெண்டிங்கிற்கு ஏற்ப பல மொபைல் செயலிகள் (Apps) வந்திருந்தாலும், தினமலர் செயலிச் செய்திகள் பிரிவில் உண்மையிலேயே மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. தினமலர் ipaper application எனக்கு இரு முக்கிய ஆலோசனைகள் உள்ளன: 1. வாராந்திர சந்தா (Weekly Subscription) அறிமுகப்படுத்தலாம். 2.தினசரி அன்றாடத் தேவைக்கேற்ப வாங்கும் வசதியை (Daily On-the-Go Purchase) வழங்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை