மேலும் செய்திகள்
தேசியமும், துணிச்சலும் 'தினமலரின் இரு கண்கள்
25-Oct-2025
தினமலர் நாளிதழ் தன் ஊடகப் பயணத்தில் 75வது ஆண்டு அடியெடுத்து வைக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் என் மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.தென் தமிழகத்தில் கடைகோடி மாவட்டமான கன்னியாகுமரியை தாய் தமிழகத்துடன் இணைக்க நடந்த போராட்டத்துக்கு உறுதுணையாக திருவனந்தபுரத்தில் 1951 ல் துவக்கப்பட்ட தினமலர் நாளிதழ் பின் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து தமிழகம் முழுதும் கிளைகளை துவக்கி, பத்திரிகை துறையில் அளப்பரிய சாதனைகளை செய்து வருகிறது.மக்களின் அன்றாட பிரச்னைகள் முதல் அரசியல் வரை தன் தாரக மந்திரமான உண்மையின் உரைகல் என்பதற்கு ஏற்ப துணிச்சலாக கருத்துக்களை வெளியிடுவதில் தினமலர் முன்னோடியாக விளங்கி வருகிறது.அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., தி.மு.க., வில் இருந்து நீக்கப்பட்ட போது, அவருக்கு பக்கபலமாக விளங்கி, தமிழகம் முழுதும் செய்திகளை வெளியிட்டு தமிழகத்தில் ஒரு அரசியல் புரட்சிக்கு வித்திட்ட எம்.ஜி.ஆருக்கு தினமலர் பெரிதும் உதவியது.தினமலர் நாளிதழின் மக்கள் பணி இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும். மேலும் பல விழாக்களை காண வேண்டும் என, வாழ்த்துகிறேன்.அன்புடன் சைதை துரைசாமி,சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர், மனிதநேய அறக்கட்டளை தலைவர்.
25-Oct-2025