உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / ‛தினமலர் நாளிதழ் ‛பவள விழா காண்பதை எனது ‛குடும்ப விழா போல் உணர்கிறேன்

‛தினமலர் நாளிதழ் ‛பவள விழா காண்பதை எனது ‛குடும்ப விழா போல் உணர்கிறேன்

இது ஒரு நீண்டகால வாசகரின் வாழ்த்து, ‛தினமலர்' நாளிதழ் ‛பவள விழா' காண்பதை பார்க்கையில் ஏதோ குடும்ப விழாவில் இருப்பது போல் சிறகடிக்கிறது மனது!என் 15வது வயது முதல் 45 ஆண்டுகளுக்கும் மேலாக தினமலர் வாசகன் நான்! மக்கள் மனதில் ஆலமரமாய் தினமலர் கிளை பரப்பி நிற்பதில் எனக்கும் பெரும் மகிழ்ச்சி! இப்போத நினைத்துப் பார்க்கிறேன்....நான் பத்தாம் வகுப்பு பொதுத்தோர்வு எழுதியபோது, தினமலர் நாளிதழில் ஒவ்வொரு பாடத்திற்கான கேள்வி - பதில்கள் தினமும் கால் பக்கம் வெளியாகும். அதை சேகரித்து படித்தது, பள்ளியில் முதல் மாணவனாய் நான் வெற்றி பெற பெரிதும் உதவியது. இன்று என் கவிதைகள் வாரமலரில் வெளியாகின்றன என்பதில் எனக்கு பெருமை!ஆளும் அரசின் தவறுகளை பாரபட்சமின்றி சுட்டிக் காட்டுவது, காலத்துக்கேற்ற தலையங்கம், அரசியல் நிலவரங்களை அலசும் டீ கடை பெஞ்ச், மக்களுக்கு அத்தியாவசியமான செய்திகளை எளிமையாய் புரியும் வண்ணம் படங்களுடன் விளக்கும்விதம், தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் ‛சொல்கிறார்கள்' பகுதி என, தினமலர் நாளிதழின் தனித்துவமிக்க அடையாளங்கள் நிறைய உண்டு!இந்த இனிய தருணத்தில், ‛வாசகர்களே எங்கள் முதலாளிகள்' என்று கூறுகின்ற தினமலர் ஆசிரியருக்கும், ஊழியர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...என். ஆசைத்தம்பி,ஆல்பா ஸ்கேன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை