மேலும் செய்திகள்
'தினமலர்' நமது பண்பாடு, கலாச்சாரத்தின் காவலன்
18-Oct-2025
தமிழ் பத்திரிகை உலகில், ஒரு அடையாளமாக, ஒரு நம்பிக்கையாக, ஒரு வரலாறாக திகழ்கிறது 'தினமலர்'. கடந்த 1951ல் இருந்து, இன்று வரை, 75 ஆண்டுகளாக உண்மையை மக்களிடம் எடுத்து செல்லும் பணியில், தளராத அர்ப்பணிப்புடன் இயங்கி வரும் 'தினமலர்', இன்று தமிழ் மக்களின் இதயத்தில் நிலைத்திருக்கும் ஊடகமாக வளர்ந்துள்ளது. துவக்க காலத்தில் சிறிய அளவில் வெளிவந்த 'தினமலர்', தனது நேர்மை, தெளிவான பத்திரிகை நோக்கம் காரணமாக, விரைவில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெற்றது. அரசியல் முதல் விளையாட்டு வரை, அனைத்து துறைகளிலும், நேர்மையான செய்திகள், ஆழமான பகுப்பாய்வுகள், மக்கள் நலன் சார்ந்த கருத்துக்கள். இதுவே தினமலரின் அடையாளமாக அமைந்துள்ளது. 'உண்மை சொல்லும் துணிச்சல்' என்பது வெறும் ஒரு வாசகம் அல்ல; தினமலரின் உயிரோட்டம். அரசியல் அழுத்தங்கள், பொருளாதார சவால்கள், சமூக மாற்றங்கள் என பல சோதனைகள் வந்தாலும், எந்த சூழலிலும், உண்மையை மறைக்காமல், வெளிப்படுத்தும் பணியில், 'தினமலர்' உறுதியாக நிற்கிறது. அதனால் தான், வாசகர்களின் நம்பிக்கை என்றும் குறையவில்லை. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அதன் இலக்கிய செல்வத்திற்கும் 'தினமலர்' அளித்த பங்களிப்பு பெரிது. அதே போல், தொழில்களுக்கு 'தினமலர்' அளிக்கும் ஆதரவும் குறிப்பிடத்தக்கது. மின்சார வாகனங்களின் துவக்க காலங்களில், மின்சார வாகன நிலையங்களை அரசு மட்டுமே நிறுவியிருந்தபோது, அதன் தேவையை, எதிர்கால முக்கியத்துவத்தை, பொதுமக்களின் நன்மை குறித்து, தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு, 'தினமலர்' பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதன் ஊக்கத்தால் இன்று, எங்கள் துறையிலும் தனியாக சார்ஜிங் நிலையங்களை நிறுவ முடிந்தது. வளர்ச்சி மற்றும் புதிய முயற்சிகளுக்கான தகவல்களை, தொடர்ந்து வெளியிட்டு, எங்கள் துறையின் முன்னேற்றத்துக்கும், 'தினமலர்' ஆதரவாக இருந்தது. இதற்காக நாங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம். 'தினமலர்' பவள விழா என்பது, வெறும் ஒரு பத்திரிகையின் சாதனையல்ல, அது ஒரு ஊடக மரபின் பெருமை. உண்மையையும், பொறுப்பையும் இணைத்து, 75 ஆண்டுகளாக தொடரும், இந்த பயணம், தமிழ் ஊடக வரலாற்றில் ஒரு பொற்கால அத்தியாயமாகும். நீண்டகால பத்திரிகை சேவையின் பின்னணியில் பணியாற்றிய ஆசிரியர்கள், நிருபர்கள், பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களின் அர்ப்பணிப்பும், உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான வாசகர்களின் நம்பிக்கையும் தான் 'தினமலர்' நாளிதழின் வலிமை. வருங்காலத்திலும் இதே நேர்மையுடனும், துணிச்சலுடனும், தமிழ் ஊடக உலகில் ஒளிர்ந்து, மக்களின் நம்பிக்கையை 'தினமலர்' மேலும் உயர்த்தட்டும். 'தினமலர்' பவள விழாவிற்கு, இதயபூர்வமான வாழ்த்துகள். அ. அன்பழகன், அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர்,பொது போக்குவரத்து ஆர்வலர்
18-Oct-2025