மேலும் செய்திகள்
சமத்துவத்தை வலியுறுத்தும் 'தினமலர்' நாளிதழ்
03-Oct-2025
மக்களின் குரலாகவும், சமூகத்தின் வழிகாட்டியாகவும் 75ம் ஆண்டில் அடியெடுத்து வைத்து சேவையாற்றி வரும் ‛தினமலர்' நாளிதழுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!பத்திரிகை நடத்துவதை லாபம் ஈட்டும் தொழிலாக அல்லாமல், சமூகத்திற்கு செய்யும் சேவையாக கருத வேண்டும். இம்மனநிலையோடு ஒரு நாளிதழை துவக்குவதற்கும், அதை வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நடத்துவதற்கும் பெரும் மன திடம் வேண்டும்.அரசியல்ரீதியான எதிர்ப்புகள், குறிப்பாக 1975களின் அடக்குமுறைகளை எல்லாம் எதிர்கொண்டு, எந்த சமரசமும் இன்றி, தினமலர் வெற்றிநடை போடுவது தமிழ் சமுதாயத்திற்கான பெருமை! தமிழக அரசியலில் பல நல்ல மாற்றங்களுக்கு தினமலர் காரணமாக இருந்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை; கால மாற்றத்திற்கேற்ப தினமலர் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது என்பது பேருண்மை!அரசின் நிர்வாக சீர்கேடுகளை வெளிச்சமிடுவதிலும், உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதிலும், சமூக சேவகர்களுக்கு சமூக அங்கீகாரம் பெற்றுத் தருவதிலும் தினமலர் நாளிதழுக்கு ஈடு இணையில்லை!எதிர்கால சந்ததியினருக்கு பொக்கிஷமான வரலாற்று பெட்டகம் நம் தினமலர் ‛44 ஆண்டு கால வாசகன்' எனும் முறையில் கர்வம் கொள்கிறனே்; ‛பவள விழா'விற்கு வாழ்த்துகிறேன்.சி.இரத்தினசாமி,தலைவர், ‛சக்க்ஷம்' மாற்றுத்திறனாளர்நலன் விரும்பும் தேசிய அமைப்பு, திருப்பூர்
03-Oct-2025