உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / ‛பவள விழா காணும் ‛தினமலர் நாளிதழின் தேசப்பணி சிகரம் தொடுவது நிச்சயம்

‛பவள விழா காணும் ‛தினமலர் நாளிதழின் தேசப்பணி சிகரம் தொடுவது நிச்சயம்

என் 14 வயதில் ‛தினமலர்' வாசிக்கத் துவங்கினேன்; தற்போது எனக்கு வயது 47. எத்தனையோ நாளிதழ்கள் இருக்கையில் எதற்காக நான் தினமலர் வாசிக்கிறேன் என்றால், ஒரே காரணம்... தினமலர் செய்திகளில் இருக்கும் உண்மை!தினமலர் உடனான என் அனுபவங்களை எழுதினால் ஒரு புத்தகம் வெளியிடும் அளவிற்கு இருக்கும்; என் சிறுவதில் இருந்து இதுநாள் வரை தினமலர் மூலமாக என்னென்ன நன்மைகள் கிடைத்திருக்கின்றன என்பதையெல்லாம் தொகுத்தால் பல பக்கங்கள் தேவைப்படும்!வாரமலர் இதழின் ‛அந்துமணி பதில்கள்' அறியாதவர்கள் இருக்க இயலாது. என் வாழ்நாளில் ஒருமுறையாவது அவரை சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை என் பேராசை.தினமலர் மீது அரசியல்ரீதியான பலர் பல்வேறு விமர்சனங்களை வைத்தாலும், ‛உள்ளதை உள்ளபடி தைரியமாகச் சொல்லும் பத்திரிகை' என்ற பெருமை தினமலர் நாளிதழுக்கு மட்டுமே உண்டு. தீர்க்கப்படாத மக்கள் பிரச்சனைகள் மற்றும் பல்வேறு செய்திகளை பிரசுரம் செய்து, அதற்கு தீர்வு ஏற்படுத்தியதில் தினமலர் நாளிதழின் பங்கு அபரிமிதமானது!‛பவள விழா' ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தினமலர் நாளிதழின் தேசப்பணி மென்மேலும் சிறந்து சிகரம் தொட வாழ்த்துகிறேன்.எஸ்.பி.சுந்தரபாண்டியன்,வரி ஆலோசகர், திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ