உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தினமலர் பவள விழா / இன்றைய இளைஞர்கள் ‛தினமலர் வாசித்தால் மட்டுமே பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்

இன்றைய இளைஞர்கள் ‛தினமலர் வாசித்தால் மட்டுமே பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்

வணக்கம், நான் 1934ம் ஆண்டு பிறந்த 91 வயதுக்காரன்!தினமும் காலை 6.30 மணிக்கு துவங்கும் எனது நாளில், ஒருவரி விடாமல், ‛தினமலர்' நாளிதழ் வாசிக்கிறேன்; 60 ஆண்டுகளாக இது என் வாடிக்கை! ‛நாட்டு நடப்புகளை முழுமையாக அறிந்து கொள்ள, தினமலர் தவிர்த்து நம்பகமான வேறு வழியில்லை' என்பது என் நம்பிக்கை.எனது 87 வயது மனைவி நாகலட்சுமியும் நானும் தினமலர் நாளிதழ் மற்றும் இணைப்பிதழ்களில் வெளியாகும் குறுக்கெழுத்து போட்டிகளின் தீவிர ரசிகர்கள். எனக்கு அரசியல் செய்திகள் அதிகம் பிடிக்கும். இப்படி ஆர்வமாக செய்திகளை நான் வாசித்தாலும், வயதின் காரணமாக உடனுக்குடன் அவை மறந்து போகும். ஆனாலும், ஒருபோதும் நம் நாளிதழ் வாசிப்பதை நான் தவறவிட்டதே இல்லை!வாரமலர், சிறுவர்மலர், ஆன்மிக மலர் புத்தகங்கள் எனக்கு மிகவும் இஷ்டம்; அதிலும், ஆன்மிக மலரை வாய்விட்டு சத்தமாக வாசிப்பேன். ஒருநாள் தினமலர் வாசிக்கவில்லை என்றாலும் ஏதோ இழந்ததைப் போல் உணர்வேன். இன்றைய இளைஞர்கள் தினமலர் வாசித்தால் மட்டுமே பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.‛நூற்றாண்டு விழா' காணும் எதிர்பார்ப்பில் இருக்கும் நான், தினமலர் நாளிதழும் ‛நூற்றாண்டு விழா' காண வாழ்த்துகிறேன்.... இறைவனை வேண்டுகிறேன்.வி.வெங்கடராமன்,சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை