உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி; ஓட்டல்களில் ஆய்வு: அபராதம்

தினமலர் செய்தி எதிரொலி; ஓட்டல்களில் ஆய்வு: அபராதம்

திண்டுக்கல் : தினமலர் செய்தி எதிரொலியாக திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் சுற்றிய ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தரமில்லாமல் உணவு தயாரித்த 4 ஓட்டல்களுக்கு அபராதம் விதித்தனர்.திண்டுக்கல் நகரில் உள்ள ஓட்டல்களில் தரமான ,சுகாதாரமான உணவு பொருட்கள் தயாரிக்கப்படுவதில்லை. இதை வாங்கி உண்ணும் வாடிக்கையாளர்கள் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதி ஆகும் நிலை தொடர்கிறது என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்பகுதி ஓட்டல்களில் ஆய்வு செய்தனர். தரம் இல்லா உணவு தயாரித்ததாகவும் செயற்கை வண்ணம் அதிகளவில் சேர்த்ததாக 4 ஓட்டல்களுக்கு ரூ.8000 அபராதம் விதித்தனர். உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். ஓட்டல்களில் தரமான உணவு பொருட்கள் வழங்காவிடில் சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை